ஜ.தே.கட்சிக்கு கூட்டமைப்பு கரம் கொடுக்குமாம் – சுத்துமாத்து சுமந்திரன் தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் தனியான ஆட்சிக்கு தேவையான சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்கும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறினால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரவிக்கையில், “இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சினர் எம்மோடு பேசியிருக்கின்றனர். தற்போதைய நிலையில் நல்லாட்சியில் இருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினாலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சியை தொடர்ந்து செல்ல முடியும். ஆனால் தீர்மானங்களை மேற்கொள்வதற்து பெரும்பான்மை இருக்காது.

எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் விடயங்களை பொறுத்து கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்கின்ற உறுதியை வழங்கி இருக்கின்றோம். இவ்வாறான நிலைப்பாட்டிலேயே மக்கள் விடுதலை முன்னணியினரும் இருப்பதாக தெரிகின்றது.

ஆனால், புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளும் கூட்டமைப்பின் எதிர்பார்ப்பிற்கு நல்லாட்சி அரசாங்கம் தொடர வேண்டிய தேவை இருக்கின்றது. அதனால், நல்லாட்சி தொடர்வதற்கு எமது தரப்பினால் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

எப்படியிருப்பினும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படுமாயின் எந்தவொரு அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டடிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை. அவ்வாறான சூழல் ஏற்படுமாக இருந்தால் அடுத்த கட்டம் பற்றி சிந்திக்க வேண்டி ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்காததால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவருவதாக
நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை நிராகரித்து வாக்களிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
இந்த மாதம் கனடா வந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இங்குள்ள கூட்டமைப்புக் கிளையின் கூட்டத்தில் ஆற்றிய

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*