தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைமைகள் போர்க்கொடி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கேட்பது போன்று பங்கிட்டால் தமிழரசுக்கட்சிக்கு ஏதும் எஞ்சப்போவதில்லையென தமிழரசின் இரண்டாம் கட்ட தலைமைகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 சபைகளையும் ஏனைய மாவட்டங்களில் தலா ஒரு சபையினையும் கோரவுள்ளதாக தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

புளொட் அமைப்பானது யாழ்ப்பாணத்தில் 3 சபைகளின் தவிசாளர் பதவிகள் உள்ளிட்ட இடங்களையும் கிளிநொச்சியில் ஒரு சபையினையும் கோருகின்றது.இதில் அதிகமாக மானிப்பாய் , சங்கானை , வலி. தெற்கு போன்ற சபைகளை கோரியுள்ளது.

ரெலோ முன்னர் தம் வசமிருந்த வல்வெட்டித்துறை நகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளை கோரவுள்ளது.மன்னாரில் அனைத்து சபைகளும் தமக்கு வழங்கவேண்டுமெனவும் அது வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மீதியாக யாழப்பாணத்திலுள்ள சபைகள் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திருப்தி கொண்டிருக்கவில்லை. ஏற்கனவே பரஸ்பரம் தம் வசமிருந்த உள்ளுராட்சி சபைகளில் கதிரை கவிழ்ப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்த தலைவர்களே மீண்டும் தேர்தல் கதிரையேற ஆசைப்பட்டுள்ள நிலையில் உள்ளக குழப்பங்கள் மும்முரமடைந்துள்ளது. இதனிடையே கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் வன்னி மாவட்டங்கள் தொடர்பில் ஓர் இணக்கத்திற்கு வந்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தொடர்பில் மட்டுமே இன்னும் பேச வேண்டிய நிலையில் உள்ளதாகவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்