இரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை நீக்கம்!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை இரணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடுக் குளத்தின் பொறியியலாளர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்தனர். இந்நிலையில், தமக்காகவும், இரணைமடுக் குளத்தினை பார்வையிடுவதற்கு வரும் மக்களின் வழிப்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்ட புத்தர் சிலையே அகற்றப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், பொறியியலாளரின் அலுவலகத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் இராணுவமுகாம் அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

குளத்தின் புனரமைப்புப் பணிகளின்போது குறித்த கோவிலிற்கு எதுவித சேதங்களுமேற்படாத நிலையில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் புத்தர் சிலையை இராணுவத்தினர் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்