19 வயது யாழ் இளைஞன் கேரளா கஞ்சாவுடன் வவுனியாவில் கைது

19 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2 கிலோ கேரளா கஞ்சாவுடன் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக நேற்று இரவு குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து இரண்டு கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரை விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணம் – புன்னாலைகட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் கடத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியை கடத்திச் சென்ற
வவுனியா -ஓமந்தை பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் குறித்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா,

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*