தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் சாதனை!

தமிழ் இணையப் பல்கலைக் கழகம் உலகளாவிய ரீதியில் நடாத்திய இலக்கியத்திறன் போட்டியில் தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

உலகம் முழுதும் பல பல்கலைக் கழக மாணவர்கள் இந்தப் போட்டிக்காக ஆக்கங்களை அனுப்பியிருந்தனர் . எனினும், எமது பல்கலைக் கழக மாணவர்கள் மொத்தமுள்ள ஆறு இடங்களில் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளனர்.

பாவாக்கம்

· முதலாமிடம்

சடாட்சரம் குகதாசன்

· இரண்டாமிடம்

தயாபரி கண்ணதாசன்

· மூன்றாமிடம்

நேசராசா சஜீர்த்தனா

கட்டுரையாக்கம்

· முதலாமிடம்

சுப்பிரமணியம் மெலானி

· இரண்டாமிடம்

இராசையா ஸ்ரீப்பிரியா

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் 25.11.2017 அன்று, தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பட்டனம்காத்தான் அம்மா பூங்கா D பிளாக் என்ற முகவரியில் நடைபெற்ற விழாவில் வைத்து வழங்கப்பட்டன.

அதேவேளை, இணையப் பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழாவிற்காக வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களும் தமிழகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்களின் இந்த இலக்கியச் சாதனை இணையப் பல்கலைக் கழகத்தின் எண்ணக்கருவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழியல் பட்டப்படிப்பு பாடப்பரப்பில் எமது ஈழத்து ஆக்கங்களை மேலும் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வழிசமைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பானது எமது ஈழத்துப் படைப்பாளிக்களுக்கும் அவர்களது ஆக்கங்களுக்கும் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகும்.

கடந்த 6 வருடங்களாக தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தால் தமிழியல் பட்டப்படிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே முப்பதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் எனபதோடு,தமிழ்ப்பள்ளிகளில் உயர் நிலை ஆசிரியர்களாகவும் கடமையாற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை பட்டம்பெற்ற பட்டதாரிகளின் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் ஆண்டு ஆவணி மாதம் 16ம் திகதி வெகுசிறப்பாக நடாத்த விரிவான ஏற்பாடுகளை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்வேண்டும் என இலங்கை அரசாங்கம் நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை
இராணுவம் பாவனைக்குதவாத வாகனங்களை பயன்படுத்தி வருவதால், விபத்துக்கள் ஏற்படுவதாக வடமாகாண மகளிர் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன்
வடமாகாணசபையின் எல்லை வரம்பு அறிக்கையை நாடாளுமன்றம் இந்த மாதம் அங்கீகரித்தால், அதற்கான தேர்தலை எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் நடத்த

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*