வடமாகாணமகளிர் விவகாரஅமைச்சர் அனந்தி சசிதரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரத் திட்டம்!

வடமாகாணமகளிர் விவகாரஅமைச்சர் அனந்திசசிதரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து அமைச்சுப் பதிவியை பறிக்க ஆலோசிக்கப்பட்டுவருவதாக அறியமுடிகிறது. இது குறித்து தெரியவருவதாவது…

தமிழரசுக் கட்சியின் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு க.வி.விக்னேசுவரன் அவர்களுக்கு அடுத்தபடியாக 85 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அனந்தி சசிதரன் அவர்கள் வெற்றியீட்டியிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் கட்சியின் உயர்மட்டத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டுநீக்குவதாக அறிவிக்கப்படடிருந்தது.

இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினராக தொடர்ந்து வந்த அனந்தி சசிதரன் அவர்கள் கடந்த சூலை மாதம் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூகசேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் ஆகிய துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்து வரும் அனந்தி சசிதரன் முதல்வருக்கு பக்கபலமாக இருந்து வருகின்றார். முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முயற்சியின் போதும் முதல்வருக்கு ஆதரவாக அனந்தி சசிதரன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் அனந்தி சசிதரனை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு சுமந்திரன் கும்பல் தருணம் பார்த்து காத்திருந்த வேளையில் நடைபெற உள்ள உள்ளுராட்சித் தேர்தல் அதற்கு அடிகோலியுள்ளது.

தமிழரசுக் கட்சி தலைமையின் எதேச்சதிகாரப் போக்கினால் விரக்தியடைந்த தமிழரசுக் கட்சியினர் ஒன்று சேர்ந்து சனநாயக தமிழரசுக் கட்சி என்ற பெயரில் செயற்பட முடிவெடுத்துள்ளார்கள். நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான பொது கூட்டணியில் கொள்கை அடிப்படையில் இணைந்து போட்டியிட பேச்சுகள் நடைபெற்று வருகின்றது. சுனநாயக தமிழரசுக் கட்சியில் அனந்தியும் பங்கேற்கும் நிலைப்பாட்டில் இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எதிலும் நேரடியாக பங்கேற்கவில்லை.

இந்நிலையில், உதயன் நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு மாகாண சபை உறுப்பினர் ஒருவர்; மாவை சேனாதிராசாவுடன் நடத்திய இரகசிய ஆலோசனையின் அடிப்படையிலேயே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர திட்டம் போடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் தமிழர் விடுதாலைக் கூட்டணி ஆகியகட்சித் தலைவர்களுடன் அனந்தி சசிதரன் அவர்கள் கிளிநொச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்று கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டதாக உதயன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

அனந்தி சசிதரனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதால் அமைச்சர் கனவு கலைந்துபோன விரக்தியில் இருந்த குறித்த மாகாண சபை உறுப்பினர் இந்த செய்தியை தூக்கிக்கொண்டு சேனாதிராசாவிடம் சென்று தூபம் போட்டுள்ளார்.

அடுத்த வாரம் வட மாகாணசபையில் 2018 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. தனது அமைச்சு தொடர்பாக அனந்தி கொண்டு வரும் வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதென்றும் அதன் அடிப்படையில் அனந்திக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிiரேரணையை கொண்டுவந்து அமைச்சுப் பதவியை பறித்துவிடும் நோக்கில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்கு சேனாதிராசா அனுமதியளித்துள்ள நிலையில், உதயன் நாளிதழில் வந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்றும் ஆதாரம் அற்றவகையில் செய்தி வெளியிட்ட உதயன் நாளிதழ் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அறிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வடமாகாண சபையின் சபாநாயகரான சீ.வி.கே.சிவஞானமும் மகளிர் விவகார அமைச்சர் கொண்டுவரும் வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிக்கப் போவதாக அனந்தி சசிதரனிடமே கூறியுள்ளதாக அறியமுடிகின்றது. இதன் மூலம் தமிழரசுக் கட்சியின் சதி ஆலோசனை உறுதியாகியுள்ளது.

இருந்தாலும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறிவரும் நிலையில் தமிழரசுக் கட்சி அனந்திக்கு எதிரான நடவடிக்கையினை மேற்கொண்டு மேலும் அதிருப்தியை சந்திக்கப் போகின்றார்களா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுகாக செயற்படுவதைக் காட்டிலும் சிங்கள அரசின் எடுபிடிகளாகவே செயற்பட்டு வருகின்றார்கள்.

அது போதாதென்று, குறைவான அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும் கிடைத்தவற்றைக் கொண்டு மக்களுக்கு செய்யக் கூடியதை செய்துவரும் வடமாகாண சபையைக்கூட செயற்படவிடாது குழப்பியடித்தும் வருகின்றமையானது தமிழர் விரோத செயற்பாட்டின் நீட்சியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களது தமிழர் விரோத செயற்பாடுகள் எல்லாவற்றிற்கும் தீர்ப்பெழுதும் நாளாக வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலை தாயகமக்கள் பயன்படுத்திக் கொள்வதன் மூலமே எமது அரசியல் இருப்பினை உறுதி செய்து கொள்ளமுடியும்.

“ஈழதேசம் இணையம் அதுஈழம் அமைக்கப் பயணம்”

ஈழதேசம் இணையம்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்