கூட்டமைப்பின் வேட்பாளர்களை ரணில் தெரிவு செய்கிறார்-ஆனந்தசங்கரி

வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பில் தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை தன்மீது சுமத்துவதாக தெரிவித்த அவர், சமஸ்டி முறை பகிர்வினை முன்னுரிமைப்படுத்தி போட்டியிட்ட ரணிலிற்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்து ஒற்றையாட்சியாளராகிய மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற செய்தது இவர்கள் செய்த மிகப்பெரும் தவறு என குறிப்பிட்டார்.

எனினும் இவ்விடயங்கள் தொடர்பில் கஜேந்திரகுமார் போன்று அவர் மீதுள்ள பல உண்மைகளை கூற முடியும். ஆனால் தான் அதை விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தற்போது ரணில் விக்ரமசிங்க இங்கு வேட்பாளர்களை நியமிக்கும் அளவிற்கு எமது அரசியல் நிலை காணப்படுகின்றது. அவை தொடர்பில் கதையுங்கள். பொய்யான கருத்துக்களை கூறி எமது கட்சியையோ அல்லது என் மீது கரிபூசும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய முன்னைய செய்தி

புதிய கூட்டமைப்பின் நோக்கம் என்ன? – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விளக்கம்

About காண்டீபன்

மறுமொழி இடவும்