சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 23 பொதுமக்கள் பலி!

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானிய ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சி படையினர் கடந்த இரண்டு வருடங்களாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனா உட்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அந்தப் பகுதிகளை சுற்றி சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில் ஹவுத்தி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் நேற்று விமானத் தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதல் சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 23 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இவ்வாற அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடாத்தி வரும் மோதல் சம்பவங்கள் மூலம் இதுவரையில் பத்தாயிரத்திற்கும் அதிகமான அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்