சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் தலைநகரில் நடைபெற்றது. கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாது தாயக உறவுகளுக்காக நீதி கோரி பல்லின மக்களிடம் தமது கவனத்தை கொண்டுசென்றதோடு, தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களால் விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச பொதுமன்னிப்புச்சபை அமைப்பில் பாரிய அளவில் பிரதி எடுக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்ட மனிதவுரிமை சாசனத்துக்கு முன்பாகவும் “146679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது” ? எனும் பதாதையை தாங்கிய வண்ணம் இலங்கை தொடர்பான மனிதவுரிமை மீறல் சார்ந்த விடயத்துக்கு நிழற்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்