பிரித்தானியாவில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு

பிரித்தானியாவில் 10.12.2017 அன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டி தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தினால் WEMBLEY INTERNATIONAL HOTEL இல் காலை 11.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை இந்த மாநாடு நடைபெற்றது

இதில் பல சட்டத்தரணிகள், வேற்று மொழி சார்ந்தவர்கள்,நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,புத்திஜீவிகள், பொதுமக்கள் மற்றும் நாடுகடந்த அரசாங்கத்தின் செயல்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இலங்கையில் நடைபெற்று முடிந்த தற்போதும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது

இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் நேரடியாக தமக்கு நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வாய் மொழி மூலமாக சாட்சியங்களை தெரிவித்தனர்

இதில் நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் இணைய வாயிலாக இணைந்து தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்