லண்டன் இல் நடைபெற்ற கறுப்பு ஜுலை யின் 2 ம் இணைப்பு‏

தமிழின வரலாற்றில் ஆறாத ரணமாகிப் போன கறுப்பு ஜுலையின் 31வது வருட நினைவு நாளான நேற்று சிங்களப் பேரினவாத அரசின் அராஜகத்தை எதிர்க்கும் வகையில் பிரித்தானியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமானது எழுச்சியுடன் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு சிங்கள அராஜகங்களை வெளிப்படுத்தி அதற்கான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். மாலை 4:00 மணியளவில் பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன்பு ஆரம்பமாகிய இந் நிகழ்வில்

1, தமிழரின் பூர்வீக நிலங்கள் சிங்கள அரசால் அபகரிக்கப்படுதல்
2, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் யுத்த சாட்சிகளை பிரித்தானியா மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்துதல்
3, தாயகத்தில் கேட்பாரற்று தொடர்ந்து இடம்பெறும் கைதுகள் மற்றும் படுகொலைகள்
4, இலங்கை, தன் மீதான சர்வதேச விசாரணைகளைத் தடுத்தல்
5, இலங்கையில் உண்மை நிலவரங்கள் வெளிவரா வண்ணம் பத்திரிகையாளார்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததல்.
6, சிங்கள அரசு புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மீது கொண்டு வந்த தடை.

போன்ற இலங்கை அரசின் அராஜக போக்கைக் கண்டித்து பதாதைகளைத் தாங்கியும் கோசங்களை எழுப்பியும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அத்துடன் இவ் விடயங்கள் உள்ளடக்கப்பட்ட காட்சிப்படுத்தலும் இதில் இடம்பெற்றது.

பிரித்தானியத் தமிழர் பேரவை அரசியல் ராஜதந்திர ரீதியாக நகர்வுகள் மூலம் மகிந்த ராஜபக்ச இங்கு வருவதற்கு பலமான எதிர்ப்பைக் கொடுத்த்திருந்தது. மகிந்த இங்கு வரப் போவதில்லை என்பதை பல்வேறு வழிகளுக்கூடாக ஏற்கெனவே உறுதிப்படுத்தி இருந்தது. ஆயினும் பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்ப தினத்த்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்த்தில் ஏராளமான மக்கள் கலந்து கொள்ளுவதற்கு இடைஞ்சாலாக எந்த விதத்த்திலும் பி த பே காரணமாகக் கூடாது என்பதனால் பகிரங்க அறிவித்த்தலைச் செய்வதைத் தவிர்த்த்துக் கொண்டது.

உள்நாட்டுப் பிரச்சினை என்று வெளி நாடுகளைத் தலையிடாமல் வைத்த்து தமிழர் மீதான இன அழிப்பைத் தொடர்ந்து வந்த சிங்கள தேசம் முதல் தடவையாக 83 கருப்பு யூழையில்தான் சர்வதேச நாடுகள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனது. உலகை உலுக்கிய கருப்பு யூலை வழமை போல் இவ் வருடமும் லண்டன் மாநகரில் எழுச்சியுடன் நடை பெற்றது.

இவை தொடார்பான மனு ஒன்றும் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் வேற்றின மக்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மாலை 6:55 மணியளவில்இ படுகொலைசெய்யப்பட்ட மக்களை நினைவூகூர்ந்து கரங்களில் சுடரேந்தி அகவணக்கம் செலுத்தி இந் நிகழ்வு நிறைவு பெற்றது.dcp27237272 (1) dcp27237272 (2) dcp27237272 (3) dcp27237272 (4) dcp27237272 (6) dcp27237272 (7) dcp27237272 (8) dcp27237272 (9) dcp27237272 (10)

Top