ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி முகத்தில் தினகரன்! பா.ஜ.க.வை முந்தியது நாம் தமிழர்!

தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததைத் தொடர்ந்து வெற்றிடமாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டி.டி.வி.தினகரன் வெற்றிமுகத்தில் இருப்பதுடன் நாட்டை ஆளும் பா.ஜ.கட்சியை பிந்தள்ளி நாம் தமிழர் கட்சி முந்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 156 தெருக்களில் 3120 வாக்காளர்களிடத்தில் நேரடியாக மக்கள் ஆய்வகம் நடத்திய (லயேலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம்) கருத்து கணிப்பு முடிவில் இவை வெளிவந்துள்ளது.

இன்றைய நிலையில் வாக்களித்தால் யாருக்கு உங்கள் வாக்கு என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில்

டிடிவி – 35.5%
மருது கணேஷ் – 28.5%
மதுசூதனன் – 21.3%
நாம் தமிழர் – 4.6%
பாஜக – 1.5%.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சின்னங்களின் பெயரால் அடையாளம் காணும் நிலை குறித்த ஆய்விலும் டி.டி.வி.தினகரன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கான பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு ஒரு நாளிற்குள் தொகுதி மக்களிடத்தில் வலுவாகச் சென்றடைந்துள்ளது.

பிரஷர் குக்கர் – தினகரன் – 91.6%
இரட்டை இலை – மதுசூதனன் – 81.1%
உதய சூரியன் – மருதுகணேஷ் – 77.8%
மெழுகுவர்த்தி – கலைக்கோட்டுதயம் – 14.2%

தமிழ்த் தேசிய பேரினத்தின் அரசியல் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் போராட்டத்தில் கொள்கைப் பற்றுடன் தனித்து களம் கண்டுவரும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வியத்தகு முன்னேற்றத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியம் பேசிய ஏனைய கட்சிகள் திராவிடக் கட்சிகளிடம் சரண்புகுந்து தமது அடையாளத்தை இழந்துள்ள நிலையில் தனித்து நின்று அரசியல் செய்துவரும் நாம் தமிழர் கட்சி மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றுவருவதை இவ் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.அதுவும் இந்தியாவை பெரும்பான்மை பலத்துடன் ஆண்டு கொண்டிருக்கும் தேசிய கட்சியான பா.ஜ.கட்சியை பிந்தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னேறியுள்ளமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் முதலால அதுவும் தனித்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சி நான்கரை லட்சம் (1%) வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்