லசந்தவின் கொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஊடகங்கள் மீது சீறுகிறார் டக்ளஸ்!

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்டோரின் கொலையுடன் தமது கட்சிக்கு தொடர்புள்ளதாக பொய் பிரசாரங்கள் செய்யப்பட்டதென, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஊடகங்கள் தமக்கு எதிராக இவ்வாறு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ள டக்ளஸ், ஏனைய தமிழ் பத்திரிகைகளை விட மாற்றுக்கொள்கையுடன் தமது சொந்தப் பத்திரிகை இயங்கியதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் வெளிப்பாடாக லசந்த உள்ளிட்ட பலரது கொலைக்கு தமது கட்சி மீது வீண்பழி சுமத்தப்பட்டதாகவும், எனினும் விசாரணைகளில் உண்மை வெளிவந்துள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பிரசாரங்களுக்காக தான் ஒருபோதும் வருந்தப் போவதில்லையென டக்ளஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த வேளை, லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலையுடன் கடந்த ஆட்சியாளர்களே தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்