சிறீதரனிடம் வந்தது இந்திய பணம் நான்கரை கோடி!

தனித்தமிழரசுக்கட்சி போட்டியிடும் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறீதரனின் கைகளை பலப்படுத்த இந்தியா அரசு முழுவீச்சில் தயாராகியுள்ளது.அதன் பிரகாரம் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செலவிற்கென முதல்கட்டமாக சுமார் நான்கரை கோடியினை இந்திய அரசு வழங்கியுள்ளது.ரணில் இதற்கான சம்மதத்தை தெரிவித்தையடுத்தே குறித்த பணம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நேற்றைய தினமே வழங்கப்பட்டுவிட்டது.

இதனையடுத்து சி.சிறீதரனும் அவரது தொண்டர்களும் முழு அளவில் ஆட்பிடிப்பு மற்றும் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர்.முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு மில்லியன்களில் பேரங்களும் பேசப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சிறீதரனை கொண்டுவருவதில் இந்தியா புலனாய்வு கட்டமைப்பு அண்மைக்காலமாக முனைப்பு காட்டிவருகின்றது.
எனினும் இம்முறை கிளிநொச்சியில் சிறீதரனிற்கு போட்டியாக சந்திரகுமார் மற்றும் வீ.ஆனந்தசங்கரி போன்றோர் களத்திலுள்ளனர்.இந்நிலையினில் சிறீதரனை கட்டிக்காக்க முற்பட்டுள்ள இந்திய புலனாய்வு கட்டமைப்பு இந்திய தேர்தல் பாணியில் அதற்கென பணத்தை அள்ளிவீசத்தொடங்கியுள்ளது.
இதனிடையே கிளிநொச்சியில் பங்காளிக்கட்சிகளின் வேட்பாளர்களை தன்னிச்சையாக நிராகரித்துவிட்டு, தனி தமிழரசுக்கட்சி வேட்பாளர் பட்டியல் ஒன்றை சிவஞானம் சிறிதரன் நேற்று சமர்ப்பித்திருந்தமை பங்காளிக்கட்சிகளை திரிசங்கு நிலைக்குத்தள்ளியுள்ளது.
ஏற்கனவே எட்டப்பட்டிருந்த இணக்கத்தை மீறி பங்காளிகளின் ஆசனங்களை சிறிதரன் வெட்டியபோது, மாவை சேனாதிராசாவின் கவனத்திற்கு அது கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாவை சேனாதிராசா, சிறிதரனை தொடர்புகொண்டு பங்காளிக்கட்சிகளிற்குரிய ஒதுக்கீட்டை வழங்கவேண்டுமென அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று, புளொட், ரெலோ இரண்டையும் நீக்கிவிட்டு தனி தமிழரசுக்கட்சி வேட்புமனுவை சிறிதரன் தாக்கல் செய்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்