தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளின் இறு­வட்­டுக்­கள் மீட்­பு

கிளி­நொச்சி – இரா­ம­நா­த­பு­ரம் பகு­தி ­யில் விடு­த­லைப்­பு­லி­க­ளின் முகாம் இருந்த இடத்­தில் சில இறு­வட்­டுக்­கள் மீட்­கப்­பட்­டுள்ளன என இரா­ம­நா­த­பு­ரம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அவை நேற்­று­முன்­தி­னம் மீட்­கப்­பட்­டன.

அவற்­றில், தலை­வர் பிர­பா­க­ர­னின் வாழ்க்கை வர­லாறு மற்­றும் அவ­ரது வீரத்­தைப் பிர­தி­ப­லிக்­கக் கூடிய காணொ­ளி­கள் காணப்­ப­டு­கின்­றன என இரா­ம­நா­த­பு­ரம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கிளி­நொச்சி – இரா­ம­நா­த­பு­ரம் பகுதி, மக்­க­ளின் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­பட்ட நிலை­யில், அங்கு வீடு கட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போதே, பாது­காப்­பான கொள்­க­லன் ஒன்­றி­லி­ருந்து இறு­வட்­டுக்­கள் மீட்­கப்­பட்­டன.

91 இறு­வட்­டுக்­க­ளும், 61 பாது­காப்பு உறை­க­ளும் இதன் போது மீட்­கப்­பட்­டன. அத்­து­டன் குறித்த இறு­வட்­டுக்­க­ளில் ‘வய­தா­ன­வர்­க­ளுக்கு மட்­டும்’ என்ற வாச­கம் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தது என பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

இதே­வேளை, 2004ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­க­ளால் வெளி­யிட்டு வைக்­கப்­பட்ட சுனாமி தொடர்­பான இறு­வட்டு ஒன்று முல்­லைத்­தீ­வில் நேற்­று­முன்­தி­னம் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்