அடக்குமுறைக்கு அடங்குபவர்கள் நாங்கள் கிடையாது! சிவாஜி

ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதை தொடர்ந்து முற்றவெளி மைதானத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப் படுவதை நாங்கள் சகித்துக் கொள்கிறோம். ஆனால் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டு முற்றவெளியில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்படுமாக இருந்தால் அதனை நாங்கள் சகித்து கொள்ளமாட்டோம். விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டபோது அங்கு வந்திருந்த பொலிஸார் விகாராதிபதியின் தகனக் கிரிகையை தடுத்தால் யாழ்ப்பாணத்தில் அமைதியின்மை உருவாகும் என கூறியிருக்கின்றார்களாம்.

இங்கே வந்து நிற்கும் பௌத்த இனவாதிகளை வைத்து கொண்டு அவர்கள் இந்தக் கருத்தை கூறியிருக்கலாம். ஆனால் நாங்கள் அடக்குமுறைகளுக்கு பயந்தவர்கள் கிடையாது. முற்றவெளியில் பூதவுடல் தகனம் செய்யப்படுமிடத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் உண்மையான அமைதியின்னை உருவாகுவதை பார்க்க நேரிடும் என்பதை நாங்கள் அரசுக்கு கூற விரும்புகிறோம். அதேபோல் இங்கே வந்திருக்கின்ற பௌத்த இனவாதிகள் இங்கே அமைதியின்மையை உருவாக்கினால் அதனை தமிழர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள் எனவும் யாரும் நினைக்கவேண்டாம்” என்றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்