தமிழினத்துக்கு பெருமை சேர்க்கும் புலம்பெயர் தமிழ் இளையோர்கள் …

உதைப்பந்தாட்டமும் / பல்லின சமூக ஒருங்கிணைப்பும் எனும் தலைப்பில் யேர்மனி ,Dortmund நகரில் நடைபெற்ற உதைப்பந்தாட்டாச்சுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் கினியா நாட்டின் புலபெயர் இளையோர்களுக்கு எதிராக தமிழ் இளையோர்கள் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தை தட்டிச்சென்று தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் .

சர்வதேச நாடுகளின் இளையோர்களுடன் , தமிழீழத்தை பிரதிநித்துவப்படுத்தி குறிப்பிட்ட நகர தமிழ் இளையோர்கள் விளையாடி பல்லின சமூகத்தின் மத்தியில் ஈழத்தமிழர்களின் அடையாளத்தை திறம்படப் பதித்துள்ளார்கள்.

இச் சுற்றுப்போட்டியில் யேர்மனி ,மரோக்கோ,கானா,கொங்கோ,குடிஸ்தான்,அங்கோலா,துருக்கி ,கம்பியா,கினியா ஆகிய நாடுகளின் புலம்பெயர் இளையோர்கள் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.இறுதிப் போட்டியில் தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமது இளையோர்களுக்கு ஆதரவு கொடுத்தது சிறப்பாக அமைந்தது .dcp2727272 (1) dcp2727272 (2) dcp2727272 (3) dcp2727272 (4) dcp2727272 (5) dcp2727272 (6)

Top