இந்தியாவை உளவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – சுஷ்மா சுவராஜ்…..!

அமெரிக்காவின் உளவு பார்க்கும் நடவடிக்கையை நான் கெர்ரியிடம் எழுப்பினேன். இது குறித்த செய்தி நாளிதழ்களில் வெளியானதும் இந்திய மக்கள் மிகவும் கோபப்பட்டனர் என்று அவரிடம் நான் கூறினேன்.

இரு நாடுகளும் ஒன்றை ஒன்று நட்பு நாடுகள் என்று கருதுகின்றன. இரண்டு நட்பு நாடுகள் ஒன்றை ஒன்று உளவு பார்க்க முடியாது என்றும், இந்த நடவடிக்கையை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலாது என்பதையும் அவரிடம் தெரிவித்தேன்” என்றார் சுஷ்மா அவர்கள்.

இதற்கு ஜான் கெர்ரியின் பதில், நாங்கள் பொது இடத்தில், உளவு சார்ந்த விஷயங்கள் குறித்துப் பேசுவதில்லை.

ஆனால், இந்தியாவுடனான எங்கள் உறவை மதிக்கிறோம். அமைச்சர் சுஷ்மா தெரிவித்த கருத்துகளை நாங்கள் முழுமையாக மதிப்பதோடு, புரிந்து கொள்ளவும் செய்கிறோம் என்றார்.

இந்தியாவை உளவு பார்க்கப்பட்ட விஷயம் வெளியே வந்தவுடன் அதாவது ஜூலியன் அசாங்கே மற்றும் எட்வர்ட் ஸ்னோடேன் சொன்னவுடன் அதற்கு இந்திய அரசு சார்பில் இவ்வாறு சொன்னார்கள்….

அமெரிக்க அரசு இவ்வாறு உளவு பார்ப்பது ஒன்றும் புதிதல்ல…மேலும் இவை அடிக்கடி நடப்பது தான் என்றார்கள்…

தற்பொழுது இந்திய மக்கள் கோபப்பட்டார்கள் என்றும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஏன் கூறுகிறார்கள்…?

பொது இடத்தில உளவு சார்ந்த விசயங்கள் குறித்து பேசுவதில்லை என்று சொல்லும் ஜான் கெர்ரி…..ஏன் பேசுவதில்லை தெரியுமா…? பொது இடத்தில் பேசினால் தங்களது வண்டவாளங்கள் அம்பலப்பட்டு போய்விடுமே மக்களிடம் என்று தான்….!

– சங்கிலிக்கருப்பு –

Top