இலங்கை வரும் ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு

ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவொன்று அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இலங்கைக்கான நட்புறவுக் குழுவின் முக்கியஸ்தரான ஜெப்ரி வேன் ஒடன், இலங்கைக்கான வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாக்கவை சந்தித்த வேளையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது இராஜாங்க அமைச்சர் ஒன்றியத்தின் பிரதி செயலளார் நாயகத்தையும் சந்தித்துள்ளார்.
இலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் மேலும் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். லக்ஷம்பேர்க் வர்த்தக சபையுடன் இராஜாங்க அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கிடையில் வாத்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் இலங்கையில் இருந்து வர்த்தகக்குழு ஒன்று லக்ஷம்பேர்க்கிற்கு விஜயம் செய்ய இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இதன்போது தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாாவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இரா.சம்பந்தனால் இன்று (07) விடப்பட்ட
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர்
வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

About காண்டீபன்

மறுமொழி இடவும்