சம்பந்தனை சந்தித்து நலம் விசாரித்த மகிந்த மற்றும் நாமல்

திடீர் சுகயீனமுற்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது மகன் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் நேரில் சென்று உடல்நலம் விசாரித்து கலந்துரையாடியுள்ளனர்.

இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சுகயீனம் காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்