சுமந்திரன் அமைச்சர்:முன்னதாகவே சொன்னதா முன்னணி?

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தற்போதைய அரசில் அமைச்சராக அல்ல அதனை தாண்டி பலம் மிக்க ஒருவராக இருப்பதாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் வேட்பாளர்கள் தொடர்பான ஊடகவியலாளர்களிற்கான அறிமுகக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது உத்தியோகப்பற்றற்ற அமைச்சராக செயற்படுவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவேயென கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அதனை தாண்டி பலம் மிக்க ஒருவராக அவர் இப்போது இருக்கின்றார்.சொந்த மக்கள் அடித்துவிடுவார்களென அவரிற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.சொந்தக்கட்சியை சேர்ந்த சிங்கள அமைச்சர்களிற்கே இல்லாத பாதுகாப்ப அதுவாகும்.

ஏற்கனவே நாம் இதனை பல தடவைகள் இந்த அரசின் நேரடியான பங்காளிகளாக கூட்டமைப்பு இருப்பதை ஆரம்பத்திலிருந்தே வெளிப்படுத்தியிருந்தோம்.அரசையும் கூட்டமைப்பினையும் பிரித்துப்பார்க்க முடியாது.ஆனால் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.தற்போது தாமதமாகவேனும் அவை உண்மையினை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா அவர்கள் 5.02.2018

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*