வேட்பாளர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என்கிறார் – மாவை

வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என தழிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த முறை 25 வீதமான பெண்கள் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட வேண்டியது கட்டாயமானது எனவும் குறிப்பிட்டார்.

தற்போது பெண்களின் பங்களிப்பு சமூகத்திற்கு அவசியம் எனும் வகையில் இவ்வாறான தேர்தலி;களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொந்த தகுதிநிலைகள், கல்வி, அனுபவம் என்வற்றை குறிப்பிட்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டியது கட்டாயம் எனவும் அவர் கூறினார்.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தரமலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜ சிங்கம், வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை
உள்ளூராட்சி சபைகளில் தமிழ்தேசிய கூட் டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க ஜ. தே.கட்சி மட்டுமே பகிரங்க அழைப்பை விடுத்துள்ளது. வேறு எந்த
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கு அதிகம் முயற்சிக்கிறார். எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை செலவு செய்கிறார்

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*