வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி :சொந்த நாட்டின் மீது விழுந்த சோகம்

வடகொரியா நடத்திய ஏவுகண சோதனை தோல்வியுற்றதால் அந்த ஏவுகணை சொந்த நாட்டின் முக்கிய நகரம் மீது விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன.புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் வடகொரியா கடந்த ஆண்டு ஏப்ரலில் ஹவ்சாங்க்-12 என்ற ஏவுகணையை பங்சாங்க் என்ற ஏவுதளத்தில் இருந்த சோதனை செய்தது. விண்ணில் பாய்ந்த அந்த ஏவுகணை 24 மைல் தொலைவில் சென்ற போது திடீரென வடகொரியாவின் குடியிருப்பு பகுதி உள்ள டோக்சான் என்ற நகரில் விழுந்தது பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக இணைய தள செய்தி பத்திரிகைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், கடந்த வாரம் கூகுள் எர்த் மூலம் டோக்சான் நகரை தேடிய போது முன்னர் இருந்த பல கட்டிடங்கள் இப்போது இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்