ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது நாமல் வாழ்த்து தெரிவிக்க காரணம் என்ன? சீமான் கேள்வி!

நான் கட்சி ஆரம்பிக்கும் போது பாராட்டாத ராஜபக்ஸவின் மகன் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவிக்க காரணம் என்ன என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருக்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றில், ரஜினியின் அரசியல் பரவேசம் குறித்து சீமான் அதிரடியாக பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இதன்போதே, ரஜினிக்கு நாமல் தெரிவித்த வாழ்த்து குறித்தும் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

“நான் கட்சி ஆரம்பிக்கும் போது வாழ்த்து தெரிவிக்காத ராஜபக்ஸவின் மகன் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது வாழ்த்து தெரிவிக்க காரணம் என்ன?

எம்மை கொன்று ஒழித்தவன் உனக்கு வாழ்த்து தெரிவித்தால், நான் போராடி கேட்டும் நீதிகளை நீங்கள் எப்படி பெற்றுத்தருவீர்கள்?

ராஜபக்ஸவின் மகன் தமிழினத்தின் தலைவனை எப்படி வாழ்த்துவார்? தமிழினத்தின் முதல்வரை ராஜபக்ஸவின் மகன் வாழ்த்துவாரானால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், அழிக்கப்பட்ட உயிர்களுக்காகவும் போராடும் மக்களுக்கு என்ன உரிமை கிடைக்கும்? என்ன நீதி கிடைக்கும்?” என சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
நடிகர்கள் அரசியலுக்கு வரும் காலம் போல இது. நீண்ட நெடுநாட்களாக அரசியலுக்கு வரக்கூடும் என கருதப்பட்ட ரஜினி, இவர் அரசியல்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் இன்று (27-05-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பின்பு துப்பாக்கி சூடும்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*