விலைவாசி அதிகரிப்பிற்கு எதிராக துனீசியாவில் ஆர்ப்பாட்டம்- 300 ற்கும் அதிகமானவர்கள் கைது

விலைவாசி அதிகரிப்பு வேலைவாய்ப்பின்மை வரி அதிகரிப்பு போன்றவற்றிற்கு எதிராக துனிசியாவின் பல இடங்களில் மக்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ள அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 330 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரபுவசந்த புரட்சி ஆரம்பமான வெற்றியடைந்த துனீசியாவிலேயே மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ளன.

அல்ஜீரியா உடனான துனீசிய எல்iயில் உள்ள தலா நகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய பாதுகாப்பு கட்டிடமொன்றை தீக்கிரையாக்கியுள்ளதுடன் பொலிஸாரை நகரத்திலிருந்து வெளியேறச்செய்துள்ளனர்.

சர்வதேச நிதியமைப்புகளை திருப்திப்படுத்துவதற்காக துனீசியாவின் அரசாங்கம் வரிகளை அதிகரித்துள்ளதை தொடர்ந்து விலைகள் அதிகரித்துள்ளதை தொடர்ந்தே பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வன்முறைகளில் களவில் ஈடுபட்ட 330 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக துனீசியாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் நகரங்களி;ல் அரசாங்கம் இராணுவத்தினரையும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்