கீரிமலையில் சுடலைக் காணியைக் கூட ஆக்கிரமித்திருக்கும் இராணுவம்!

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் சுடலைக் காணியைக் கூட சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. கீரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சுடலை இருந்த இடத்தை சிறலங்கா இராணுவம் தொடர்ந்தும் ஆக்கிரமித்து இருந்து வருகின்றது.

சிறிலங்கா கடற்படை முகாமிற்காக உயர் பாதுகாப்பு வலையமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் குறித்த சுடலைப்பகுதி அமைந்துள்ளது. இத்துடன் பிரதான வீதியையும் மக்கள் பயன்பாட்டிற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனால் தற்காலிகமாக சுடலைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்வதற்கு கூட நீண்டதூரம் பயனிக்க வேண்டியுள்ளது. இந்த நல்லாட்சி அரசின் காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு கூட பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்