தமிழ்தேசியக் கூட்டமைப்மை அழிப்பது பகல்கனவு: சத்தியலிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பல கருத்துக்களை கூறி சிலர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) வவுனியா, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் சத்தியலிங்கம் அவர்களால்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறமுன்னர் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. வவுனியா நகரசபை, மாநகரசபையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்ட்டிருந்தது. அதனைத் தடுப்பதற்கு பல கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அபிவிருத்தி தொடர்பான விடயங்களை விடுத்து அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்றத்தின் தேர்தலுக்கு சம்பந்தமில்லாத விடயங்களை பேசுவதை தற்போது காணக்கூடியதாக இருக்கிறது.

எதிர்வரும் தேர்தலில், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு என்ற பெயரை வைத்து மக்களிடம் வாக்குகளை பெற பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இலங்கையின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக உள்ளது. ஆகவே தமிழ்தேசிய விடுதலை கூட்டமைப்பின் பெயரை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்துக்கொள்ளுங்கள். அதைவிடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்கலாம் என்பது எப்போதும் பகல் கனவாகவே இருக்கும் எனவும் சத்தியலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்