மட்டக்களப்பில் வேட்பாளரின் வீட்டின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

மட்டக்களப்பு – மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தாக்குதல், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக போட்டியிடும் எஸ்.சிவசுந்தரம் என்பவரது வீட்டின் மீது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இப் பெற்றோல் குண்டுத் தாக்குதலில் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ்
மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் களப்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மட்டக்களப்பு பொதுச்சந்தை வியாபார சங்கத்தின் தலைவரான
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது. ஆண் ஒருவரின் சடலமே கும்புறுமூலை வெம்பு காட்டுப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக,

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*