சீனாவின் பக்கம் செல்லும் சிறீலங்கா-இந்திய இராணுவத்தளபதி எச்சரிக்கை!

சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடு அல்ல.

பாகிஸ்தான் எல்லையின் மீதுள்ள கவனத்தை இந்தியா சீனாவின் பக்கமும் திருப்ப வேண்டிய தேவை உள்ளது.

எமது அயல்நாடுகள் சீனாவை நோக்கி நகர்வதை அனுமதிக்கக் கூடாது. அயலவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையை இந்திய அரசாங்கம் காத்திரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

சீனாவைக் கையாளுவதற்கான பரந்துபட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, நோபாளம், பூட்டான், மியான்மார், சிறிலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை, இந்தியா தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு இந்தியா முழுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, ரஷ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி
சிறிலங்காவில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்து கனடா
எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், முதல் மூன்று நாட்களுக்கான அமர்வுகளில் மாத்திரமே தாம் கலந்துகொள்ளவுள்ளதாக ஜெனிவாவிற்கான

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*