தமிழ் மக்கள் பேரவைக்கு தேர்தல் திணைக்களம் தடை?

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில், யாழ் பல்கலைக்கழகத்தில் , இடைக்கால அறிக்கையின் மாயைகளை களைதல் மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் கேடயமாக சர்வதேச சட்டங்கள் எனும் தலைப்பில் இரண்டு கல்வியியலாளர்கள் கருத்துரை வழங்கவிருந்த கலந்துரையாடலிற்கு தேர்தல் திணைக்களம் தடைவிதித்துள்ளது.

எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா மற்றும் சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றவிருந்தனர்.
தமிழ் மக்கள் பேரவை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் தற்போது அது தடைசெய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு தேர்தல் பிரச்சாரக்கூட்டமென கூட்டமைப்பின் தலைமையை சேர்ந்தவர்களென எதிர்பார்க்கப்படும் சிலர் செய்த முறைப்பாட்டையடுத்தே இடைக்கால அறிக்கை தொடர்பான திறந்த விவாதத்திற்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இடைக்கால அறிக்கையை முன்னிறுத்தி தமிழரசு பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த கல்வியியலாளர்களின் விவாதம் ,உண்மையான விடயங்களை வெளிக்கொண்டுவரலாம் என்ற அச்சங்காரணமாக தடை அனுமதி பெறப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்