“ஏக்கிய ராச்சிய“ என்பது தொடர்பில் கஜேந்திரகுமார் விளக்கம்!

ஒற்றையாட்சி முறைமையிலும், பிரிந்து செல்லக் கூடிய தன்மை இருப்பதால் அந்த சொற் பிரயோகத்தை மாற்றி சிங்கள மொழியில் மிகவும் இறுக்கமாக ஏக்கிய ராச்சிய, தமிழில் ஒருமித்த நாடு என புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த நாடு என்ற பதத்தில் உள்ள ரகசியத்தை போட்டுடைத்த பொன்னம்பலம்

பிரித்தானியாவில் ஒற்றையாட்சி முறைமை காணப்பட்டாலும் அங்குள்ள பிராந்தியங்கள் தனியாக பிரிந்து போக்கூடிய தன்மை கொண்டவையாக இருப்பதாக தெரிவித்த கஜேந்திர குமார் பொன்னம்பலம், இந்த அச்சத்தின் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒற்றையாட்சி முறைமையை மாற்றியமைத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதுவரை காலமும் ஒற்றையாட்சி முறைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் தற்போது ஒற்றை ஆட்சியின் முக்கியத்துவம் தொடர்பாக கருத்து கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒருமித்த நாடு என்ற சொற் பதத்தை மேற்கோள் காட்டி விளக்கமளித்த கஜேந்திர குமார், ஒருமித்த நாடு என்பது எந்த காலத்திலும் பிரிந்து போக முடியாத இயல்பை கொண்டது என்ற தொனியிலும் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்