குர்திஸ் பகுதிகள் மீது விரைவில் தாக்குதல்- துருக்கி ஜனாதிபதி அறிவிப்பு

வடசிரியாவில் உள்ள குர்திஸ்பகுதி மீது எதிர்வரும் நாட்களில் தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ள துருக்கி அதற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்காவை கோரியுள்ளது.
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இதனை தெரிவித்துள்ளார்.

துருக்கியின்தென்பகுதி எல்லையை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவே சிரியாவின் வடபகுதியில் உள்ள அப்ரின் மீது தாக்குதலை மேற்கொள்ளப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்
குறிப்பிட்ட பகுதியை குர்திஸ் ஆயுதக்குழுவான வைபிஜி தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. துருக்கி அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.வைபிஜி அமைப்பு தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் இயக்கமான பீகேகேயின் ஒரு பகுதி என துருக்கி கருதுகின்றது.

துருக்கியும் அமெரிக்கா உட்பட அதன் மேற்குலக சகாக்களும் பீகேகே இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக கருதுகின்ற போதிலும் ஐஎஸ் அமைப்பை தோற்கடிப்பதற்காக அமெரிக்கா குர்திஸ் அமைப்பிற்கு ஆயுதங்களை வழங்கிவருகின்றது.
இதன் காரணமாக துருக்கி அமெரிக்க உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அப்ரின் மீது தனது நாடு மேற்கொள்ளவுள்ள தாக்குதலின் போது அமெரிக்கா குர்திஸ் ஆயுதகுழுவிற்கு சார்பாக செயற்பாடு எனவும் துருக்கி ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்