போர்க்குற்ற விசாரணை முக்கியம்:முதலமைச்சர் தெரிவிப்பு!

சர்வதேசச்சட்டம்நிலைமைக்கேற்றவாறு,சூழலுக்கேற்றவாறு மாறுதல் அடைந்துவந்துள்ளது. எனவே தான் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கியநாடுகள் நிலைமாற்ற நீதிமுறைகள் என்று எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலும் போர்க்குற்றவிசாரணையும் எமக்கு முக்கியமாகியுள்ளனவென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் இரண்டையுந் தட்டிக்கழிக்கவே இலங்கைஅரசாங்கம் முற்பட்டுள்ளது. அதிகாரப் பரவலில் நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் எமக்கு மறுக்கப்படவிருக்கின்றது. மத்தியின் மையத்தினுள் மாகாணத்தை தொடர்ந்து வைத்திருக்கவே அரசாங்கம் மும்முரம் காட்டுகின்றது. ஆனால் எம்முட் சிலரோ அதற்கென்ன நாங்கள் கொழும்பில்த்தானேவ சிக்கின்றோம், மத்திய அரசாங்கம் இங்குதானே இருக்கின்றது,நாம் இங்கு சுதந்திரமாக எப்படியும் வலம் வரலாம்,ஆனால் மக்களுக்குச்சுதந்திரம் கொடுத்தால் எமது சுதந்திரம் பறிபோய்விடும்,எனவேஅரசாங்கம் சாட்டையைத் தன்கைவசம் வைத்திருப்பதை நாம் வரவேற்கின்றோம்”என்றபாணியில் நடந்துவருகின்றார்கள். அவர்களின் நடவடிக்கைகாலாகாலத்தில் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்தைக் குளிதோண்டிப் புதைத்துவிடும் என்பதைஅவர்கள் உணர்கின்றார்கள் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் மக்களுக்கெடுத்துக் கூறும் தொடரின் அங்குரார்ப்பணக் கூட்டம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றிருந்தது
அங்கு உரையாற்றிய முதலமைச்சர் சர்வதேச சட்டத்தைப்பார்த்தோமானால் இன்று அது பலவழிகளிலும் விரிவடைந்து வருகின்றது என்பதை அவதானிப்போம். சர்வதேசசட்டம் என்றாலேயே பாரம்பரியமாகவோ உடன்பாடுகள் மூலமாகவோ ஒன்று சேர்ந்த ஒரு தொகை விதிகளையே அடிப்படையில் அது குறிப்பிடும். இந்த விதிகளைக் கொண்டுநாடுகள் தம்மிடையேயான உறவுகளை வளர்க்கும் போது விதிகள் சட்ட அந்தஸ்து பெறுகின்றன.

அண்மைக்காலங்களில் பல முக்கிய மாற்றங்கள் சர்வதேசச் சட்டத்தில் ஏற்பட்டுள்ளன. பலநாடுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள்,அவற்றினால் உலக மக்கள் மனதில் ஏற்பட்டதாக்கங்கள் போன்றவை இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆகிவிட்டன. 1983ம் ஆண்டு ஜுலைமாதத்தில் எமது அப்போதைய பிரதமநீதியரசர் நெவில் சமரக்கோன் அவர்கள் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்தார். அம் மாதம் 23ந் திகதிக்கு பின்வந்த நாட்களில் இலங்கையில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வுகள் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வந்தன. அது பற்றி அவர் பின்னர் என்னிடம் கூறியபோது“எமதுநாடு அந்தக் காலகட்டத்தில் நாறியது”என்றார். “வெட்கப்படுகின்றேன்”என்றார். அவ்வாறு நாடுகளில் நடந்தவற்றைப் பார்த்த சட்ட வல்லுநர்கள் பலர்,சர்வதேசச்சட்டத்தை விரிவாக்க வேண்டும் என்றுஎண்ணியகாரணத்தாலேயேசர்வதேசச்சட்டம் இப்போது விரிவடைந்தநிலையில் உள்ளது. இதன் பிரதிபலிப்பே உலகக் குற்றவியல் நீதிமன்ற ஏற்பாடு. அது மட்டுமல்ல.நிலைமாற்றத்தின் போது பாதிப்புக்குள்ளான நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இப்பொழுது வலுவான கருத்துக்கள் தோன்றியுள்ளன.
நிலைமாற்றம் என்றால் என்ன? ஒருநாட்டின் அரசியல் நிலையில்,யதார்த்தநிலையில் மாற்றம் ஏற்படுவதையே அதுகுறிக்கின்றது. ஒரு இருண்டகாலத்தினுள் இருந்து வெளிச்சத்தை நோக் ;டிப்பார்ப்பதையே நிலைமாற்றம் குறிக்கின்றது. எனவே நிலைமாறும் நாடுகள் நீதிக்குகந்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளே நிலைமாற்ற நீதிமுறைகள் ஆவன. இதையேவுசயளெவைழையெட துரளவiஉந என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கஸ்ட நிலையில் இருந்து ஒருநாடு மீண்டுவரும்போது என்னென்ன நடவடிக்கைகளை நீதிக்குகந்ததாக அந் நாட்டில் எடுக்கவேண்டும் என்று சர்வதேச சட்டம் எதிர்பார்க்கின்றதோ அவற்றையே நிலைமாற்ற நீதிமுறைகள் என்று குறிப்பிடுகின்றது சர்வதேசச்சட்டம்.

யாரோ அடக்கி ஆளப்பட்டதால்த்தான் அந் நாட்டில் வன்முறைவெடித்திருக்கவேண்டும ;அல்லதுகிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கவேண்டும் என்ற அடிப்படையில் நிலைமாற்ற நீதிமுறைகள் இரண்டு முக்கிய எதிர்பார்ப்புக்களை முன்னிறுத்தியுள்ளன. ஒன்றுஅதிகாரப்பரவலாக்கம் மற்றது போர்க்குற்றவாளிகளைத் தண்டித்தல். இவற்றைச் சர்வதேசச்சமூகம் இலங்கையிலும் எதிர்பார்க்கின்றது. போர் முடிவுக்கு 2009ல் வந்திருப்பினும் இனப்பிரச்சனை அதனால்த் தீர்க்கப்படவில்லை. அதனால்த்தான் அதிகாரப்பரவலாக்கம் தேவையுடையதாகின்றது.தற்போதும் 13வது திருத்தச்சட்டம் அதிகாரப்பரவலாக்கத்தை ஏற்படுத்தியேயுள்ளது. ஆனால் அதுபெரும்பான்மையினரின் பெருந்தயவை முன்வைத்தேயாக்கப்பட்டுள்ளது. அதனால்த்தான் 1992ன் 58வது இலக்கச் சட்டமான மாவட்டசெயலாளர்கள் பற்றிய அதிகாரமாற்றச்சட்டத்தை இயற்றக் கூடியதாக இருந்தது.ஒற்றையாட்சிஎனும் போதுமுன்னர் கொடுத்தஅதிகாரங்களைப் பறித்துஇவ்வாறானசட்டங்களைக் கொண்டுவரலாம். காரணம்ஒற்றையாட்சியின் கீழ்அதிகாரம் பெரும்பான்மையினரின் கைவசமேதொடர்ந்திருக்கும். மாகாணசபைகளின் அதிகாரத்தின் கீழிருந்தமாவட்டச் செயலர்கள் திடீரென்று இந்தச் சட்டம் இயற்றப்பட்டதும் மத்திக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் இன்றுவடமாகாணத்தில் இரட்டைநிர்வாகம் நடைபெற்றுவருகின்றது. ஒன்றுமக்களால்த் தேர்ந்தெடுக்கப்பட்டமாகாணஉறுப்பினர்களின் நிர்வாகம் மற்றையதுமத்தியஅரசாங்கத்தின் முகவர்களின் நிர்வாகம். இங்கு இரு முகவர்கள் சேர்ந்தும் சேராமலும் அவர்கள்நிர்வாகத்தைநடாத்திவருகின்றார்கள். ஆளுநரும் மத்தியின் முகவர். அரசாங்கஅதிபரும் அவர்களின் முகவரே. ஆகவேஅதிகாரப் பரவலாக்கம் என்றபோதுநாம் எதிர்பார்த்ததுநம்மைநாமேஆண்டுவருவதையே. ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்கம் என்றபோர்வையில் எமக்குக் கிடைத்ததுவேண்டியபோதுமத்தியின் ஊடுறுவல்களே. இவ்வாறுஊடுறுவல்கள்தொடர்ந்து இருந்தால் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படப்போகின்றவர்கள் போருக்குமுன்னர் பாதிக்கப்பட்டஅதேமக்களே.

இதனால்த்தான் ஒற்றையாட்சியைக் களைந்துசம~;டி ஆட்சியைநிலைநிறுத்தவேண்டும் என்றுகேட்டுவருகின்றோம். இடைக்காலவரைவுகள் ஒற்றையாட்சியினையேமையமாகக் கொண்டுவரையப்பட்டதால்த்தான் சர்வதேசநாடுகள் போதியஅதிகாரப்பகிர்வுவழங்கப்படவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாகஉள்ளனர். இப்பொழுது இன்றையபேச்சாளர்களின் பேச்சுக்களின் கருப்பொருட்களின் ஒன்றுக்கொன்றானதொடர்பானதுஉங்களுக்குப் புரிந்திருக்கும் என்றுநம்புகின்றேன்.
சர்வதேசச் சட்டம் எதிர்பார்ப்பதைத்தான் ஐக்கியநாடுகள் கூறியுள்ளன. ஆர்ஜென்டீனாசர்வாதிகாரத்தில் இருந்துவெளிவந்தபோதுயுகோஸ்லாவியா,றுவண்டாமற்றும் கம்போடியாபோன்றநாடுகளின் உள்நாட்டுப் போர்களில் இருந்துஅவைவிடுபட்டபோதுநிலைமாற்றநீதிமுறைகள் என்றஅடிப்படையில்ஐக்கியநாடுகள் தடைகளைவிதித்தன. உலகக் குற்றவியல் மன்றத்தைஉருவாக்குவதில் ஐக்கியநாடுகள் கரிசனைகாட்டின. ஆகவேசர்வதேசச் சட்டம் நிலைமைக்கேற்றவாறு,சூழலுக்கேற்றவாறுமாறுதல் அடைந்துவந்துள்ளது.

எனவேதான் சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கியநாடுகள் நிலைமாற்றநீதிமுறைகள் என்றுஎதிர்பார்க்கும் அதிகாரப் பரவலும் போர்க்குற்றவிசாரணையும் எமக்குமுக்கியமாகியுள்ளன. இரண்டையுந் தட்டிக்கழிக்கவே இலங்கைஅரசாங்கம் முற்பட்டுள்ளது. அதிகாரப் பரவலில் நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் எமக்குமறுக்கப்படவிருக்கின்றது. மத்தியின் மையத்தினுள் மாகாணத்தைதொடர்ந்துவைத்திருக்கவேஅரசாங்கம்மும்முரம் காட்டுகின்றது. ஆனால் எம்முட் சிலரோ“அதற்கென்னநாங்கள் கொழும்பில்த்தானேவசிக்கின்றோம்,மத்தியஅரசாங்கம் இங்குதானே இருக்கின்றது,நாம் இங்குசுதந்திரமாகஎப்படியும் வலம் வரலாம்,ஆனால் மக்களுக்குச்சுதந்திரம் கொடுத்தால் எமதுசுதந்திரம் பறிபோய்விடும்,எனவேஅரசாங்கம் சாட்டையைத் தன்கைவசம் வைத்திருப்பதைநாம் வரவேற்கின்றோம்”என்றபாணியில் நடந்துவருகின்றார்கள். அவர்களின் நடவடிக்கைகாலாகாலத்தில் வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்தைக் குளிதோண்டிப் புதைத்துவிடும் என்பதைஅவர்கள் உணர்கின்றார்கள் இல்லை.

ஒற்றையாட்சியால் எமதுமீனவர்களின் பாரம்பரியமீன்பிடி இடங்கள் பறிபோகப் போகின்றன. படைகள் தொடர்ந்துஎம் மாகாணங்களில் நிலைநிற்கப்போகின்றன. எம் காணிகளின்வருமானங்கள் அவர்கள் கைவசம் செல்லவிருக்கின்றன. மகாவலிசட்டத்தின் கீழ்மேலும் மேலும் வெளியிலிருந்துமக்களைஎமதுமாகாணத்தினுள் கொண்டுவந்துகுடியேற்ற இருக்கின்றார்கள். சுற்றுலாவைதமக்குச் சாதகமாகவளர்த்துக்கொள்ளவிருக்கின்றார்கள். எம் மக்களின் தொகைக் குறைவினால் திணைக்களங்களில் தென்னவரைநிலைநிறுத்திவருகின்றார்கள். இந்தநிலைதொடரும்.முன்னேற்றம் என்றபோர்வையில் எமதுகாணிகளைச் சுவீகரிக்கநடவடிக்கைஎடுத்துவருகின்றார்கள். இன்னும் பலதையுங் கூறலாம்.
சம~;டி அரசியலின் கீழ் சுயாட்சிச் சுதந்திரம் அதிகாரப்பரவலாக்கல் மூலம் எமக்குக் கிடைத்தால் இவற்றைத் தடுத்துநிறுத்தலாம். ஆனால் ஒற்றையாட்சியின் கீழ் அவைதடுக்கப்படமுடியாது.

ஐக்கியநாடுகள் முன்,தாமேமுன்வந்துசெய்வதாகஏற்றுக்கொண்டவற்றைஇன்றுசெய்யப் பின் நிற்கின்றதுஎம் நாட்டின் அரசாங்கம்.
அடுத்துபோர்க்குற்றவிசாரணைகளையும் நிலைமாற்றநீதிமுறைமைகள் வலியுறுத்துகின்றன. அதைத் தட்டிக்கழிக்கப் பார்க்கின்றதுஎமதுஅரசாங்கம். போர்க்குற்றங்கள் எத்தகையனஎன்பதுபற்றியெல்லாம் பேராசிரியர் சுவர்ணராஜா அவர்கள் விளக்கப்படுத்தினார். போரைஅநியாயமானமுறையில் வேண்டுமென்றேநடத்துவதுபோர்க்குற்றம்.

அடுத்துமனிதகுலத்திற்கெதிரானசெயல்களில் ஈடுபடுவதுபோர்க்குற்றம். மூன்றாவதுவேண்டுமென்றே இன அழிப்பில் ஈடுபடுவதுபோர்க்குற்றம். மூன்றிலும் எமதுஅரசபடைகள் ஈடுபட்டிருந்தன. அக்குற்றவாளிகளை இனங்காணஎமதுமத்தியஅரசாங்கம் பின் நிற்கின்றது.
இனப்படுகொலைபற்றியவிளக்கமும் அண்மைக் காலங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பர்மாவில் றோகின்தியாகொலைகள்,ஈராக்கில் யாசிடியரின் வன்புணர்வுநிகழ்ச்சிகள் இனப்படுகொலையின் அம்சமேஎன்றுதீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இன்றையபேச்சுக்களால்நாம் முக்கியமான இரு விடயங்களைப்புரிந்துள்ளோம். சர்வதேசச்சட்டம் விரிவடைந்துள்ளதால் எமதுஅல்லல்களும் அழிவுகளும் அதனுள் அடங்குவனஎன்றமுறையில் சர்வதேசச் சட்டத்தைஒருகேடயமாகஏந்திமத்தியஅரசுடன் மோதமுடியும் என்பது. அடுத்து இல்லாததை இருப்பதாகக் கூறி இனிவருங்காலத்தில் இருப்பதையும் இல்லாததாக்கநாம் உடன்படக்கூடாதுஎன்பது. ஆகவேசர்வதேசச் சட்டம் எதிர்பார்க்கும் நிலைமாற்றநீதிமுறைமைகளின் கீழ் முறையானஅதிகாரப் பரவலாக்கத்தைமுயன்றுபெறநீங்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

நிலைமாற்றநீதிமுறைமைகளின் கீழ் போர்க்குற்றவிசாரணைகளாவனசர்வதேசநீதிபதிகளையும் உள்ளடக்கிக் குற்றவாளிகளைஅடையாளங்காணவேண்டும். நாங்கள் இராணுவத்தைஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றியகாவாலிகள் சிலரைஅடையாளப்படுத்தவேண்டும் என்றேகேட்கின்றோம். அந்தக் காவாலிகளைவீரதீரசூரர்கள்,சிங்களமக்களின் காவல் மன்னர்கள் என்றமுறையில் மத்தியஅரசாங்கத்தில் உள்ளோர் பலர் காப்பாற்றவிளைந்துள்ளார்கள். எமதுநெருக்குதல்கள் காவாலிகளைக் கடைத்தெருவுக்கு இழுத்துவரவேண்டும் என்றுகருதுகின்றோம். இவற்றைச் செய்யநாம் மக்கள் இயக்கமாகஒருங்கிணைந்துமுன்னேறவேண்டும் என்றுகேட்டுக் கொள்கின்றேன். எமதுபார்வைசரியென்றுகருதும் யாவரும் எம்முடையமக்கள் இயக்கத்துடன் இணைந்துஅரசாங்கத்திற்குஉள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்குதல்களைஏற்படுத்தமுன்வரவேண்டும் என்றுகேட்டுக்கொள்வதாகமுதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்