அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் குமாரவடிவேல் குருபரன் கருத்து

அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யைக் குழப்­பு­வது எமது நோக்­க­மல்ல. அனைத்து மக்­க­ளும் ஏற்­றுக் கொள்­ளக் கூடிய அர­சி­யல் தீர்வு கிடைக்க வேண்­டும் என்­பதே எமது நோக்­கம் என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக விரி­வு­ரை­யா­ளர் குமாரவடிவேல் குரு­ப­ரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஏற்­பாட்­டில் யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் “இடைக்­கால அறிக்கை – மாயை­களை கட்­டு­டைத்­தல்” என்ற கருத்­தா­டல் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-,

இலங்­கை­யில் போர் மௌனிக்­கப்­பட்ட பின்­னர் அர­சி­யல் ரீதி­யாக மாத்­தி­ரமே எமது உரி­மை­க­ளைப் பெற்­றுக் கொள்ள முடி­யும். ஒரு சில­ரி­டம் மட்­டும் அந்த அர­ச­மைப்பு ஆக்­கத்தை ஒப்­ப­டைத்­து­விட்டு மக்­கள் ஒதுங்கி இருக்க முடி­யாது.

சட்­டம், ஒழுங்கு, கல்வி, மீன்­பிடி, விவ­சா­யம், கூட்­டு­றவு போன்ற விட­யங்­கள் இடைக்­கால அறிக்­கை­யில் முற்­று­மு­ழு­தாக மௌனிக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­கா­லத்­தில் வர­லாம் என்­பது பற்றி எனக்­குத் தெரி­யாது. இந்த இடைக்­கால அறிக்­கையை வைத்­துக் கொண்டு மக்­கள் முடி­வெ­டுப்­ப­தா­யின் ஒன்­றை­யாட்சி என்ற குணா­தி­ச­யத்­தில் இருந்து தாண்டி வர இந்த அறிக்­கை­யில் முதற்­கட்ட விட­யம் ஏதா­வது இருக்­கின்­ற­னவா? அல்­லது மகாண அர­சு­க­ளுக்கு சுயா­தீன அதி­கா­ரம் கிடைக்க ஏற்­பா­டு­கள் ஏதா­வது உள்­ள­னவா? என ஆராய்ந்து மக்­கள் முடி­வெ­டுக்க வேண்­டும்.

ஒரு முதுர்ச்­சி­யான தமிழ் சமூ­கம் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மா­னால் பொது விட­யங்­க­ளில் நாட்­டம் கொள்ள வேண்­டும். பல்­க­லைக் கழ­கச் சமூ­கம், ஆசி­ரி­யர் சங்­கம், தமிழ் மக்­கள் பேரவை போன்­றவை அதில் அங்­கம் வகிக்க வேண்­டும்.தமிழ் மக்­கள் பேர­வை­யின் இந்­தக் கருத்­தா­டல் நிகழ்­வுக்கு அர­சி­யல் சாயம் பூசி குழப்­பு­வ­தற்­குச் சிலர் முயற்­சித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழ­கத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­ட­போது சில அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு ஆத­ர­வா­க­வும் சில அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு எதி­ரா­க­வும் கருத்­துக்­களை முன்­வைத்து மக்­களை திசை திருப்ப போகின்­ற­னர் என்று கூறி தேர்­தல் தினை­கக்­ளத்­துக்கு அறி­வித்து நிறுத்­தி­னார்­கள். பின்­னர் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் கருத்­தா­டலை நடத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. அப்­போ­தும் சிலர் தடுத்து நிறுத்த முயன்­ற­னர்.

அவர்­க­ளுக்கு அது சாத­கா­மாக அமை­ய­வில்லை. எவ்­வித அர­சி­யல் பேச்­சும் இல்­லாது இருக்க வேண்­டும் என தேர்­தல் திணைக்­க­ளம் அறி­வு­றுத்­திக் கடி­த­மும் அனுப்­பி­யுள்­ளது. நாட்­டில் நீதித்­துறை, தேர்­தல் திணைக்­க­ளம் இரண்­டுமே நடு­நி­லை­மை­யு­டன் செயற்­பட வேண்­டும்.

அவ்­வா­றான தேர்­தல் திணைக்­க­ளம் அர­சி­யல் பேசக் கூடாது என கூறு­வது வேடிக்­கை­யாக உள்­ளது. இந்த நிகழ்வு நடக்க கூடாது எனக் கருதி முறைப்­பாடு செய்­த­வர்­க­ளின் விவ­ரங்­களை தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடக அறி­வேன். – என்­றார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்