சிங்கக்கொடி சம்பந்தனா, சிவி விக்னேஸ்வரனா?

வடக்கு மாகண சபையின், முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் அவர்களை பதவியிலிருந்தும், அரசியல் அரங்கிலிருந்தும் அகற்றுவதற்கு இரா சம்பந்தன் தலைமையிலான தமிழரசு கட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை பீடத்தினால் போடப்பட்ட சதி மக்கள் சக்தியினால் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது.

வடக்கின் பெரிய மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் சம்பந்தன் கூட்டணியின் தமிழரசு கட்சி செயற்பாடுகளுக்கு எதிராகவும், முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாகவும் மக்கள் தன்னெழுச்சியில் பெருவாரியாக வீதிக்கு வந்து தங்கள் ஆதரவை முதலமைச்சருக்கு காட்டியதுடன் தமிழரசுக்கட்சிக்கும் சம்பந்தன், சுமந்திரன், மாவை மற்றும் தமிழரசு கட்சியின் சகபாடிகளுக்கு எதிரான முழக்கங்களையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தொடர்ந்து விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராக தொடர்வதற்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது.

தமிழரசு கட்சி என்ற கட்சி 1970 களிலேயே காலாவதியாகிப்போன கட்சியாகும்.

1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளாக இருந்த இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ்க்காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த இலங்கை தமிழரசு கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை கூட்டாக சேர்ந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின.

மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோர் கட்சியின் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

அந்த அமைப்பு 1976 ல் தமிழர் ஐக்கிய முன்னணி, என்று அழைக்கப்பட்டது அதன்பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்றும் தமிழர் விடுதலை கூட்டணி என்றும் அக் கட்சி அழைக்கப்பட்டது. இப்போது அவை எதுவும் அசைவாக்கத்தில் இல்லை.

ஈழத்தமிழர்களுக்காக தந்தை செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து 1976 மே 14 அன்று வட்டுக்கோட்டையில் ஒரு தீர்மானம் பிரகடனம் செய்யப்பட்டது.

(அன்று அந்த கட்சியில் கடைநிலை உறுப்பினராக இருந்த ஒருவர்தான் சாட்சாத் சிங்கக்கொடி புகழ் இரா சம்பந்தனார் அவர்கள்).

1 இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.

2 அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.

3 அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்று வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த அந்த பிரகடனம் அமையப்பட்டிருந்தது.

அந்த பிரகடன தீர்மானத்தில் தமிழ் ஈழம் ஒன்றுதான் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையும் என்று தந்தை செல்வநாயகம் தலைமையில் பிரகடனம் செய்யப்பட்டது அதை ஏற்றுக்கொள்ளாத இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

தோட்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில்க்கொண்டு அன்று தொண்டமான் வெளியேறியதற்கான காரணங்கள் ஓரளவு நியாயமாகவே பார்க்கப்பட்டன.

1977 ஏப்ரல் 26ம் திகதி தந்தை செல்வநாயகம் அவர்கள் காலமானார்.

அந்த காலகட்டங்களில் சிங்கள ஏகாதிபத்திய தரப்படுத்தல் மற்றும் திட்டமிட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் கொள்கைகளை பின்பற்றி காலத்தின் கட்டாயமாக ஆயுதப்போராட்டம் உருவெடுத்தது.

போராட்ட காலகட்டத்தில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி அவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் மற்றும் கட்சியின் அடிப்படை கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு தனது ஒரு மனித சுயநலனை முன்னெடுத்ததனால் தமிழர் விடுதலை கூட்டணி மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட லெட்டர் பாட் கட்சியாக மாற்றம் பெற்றது.

தொடர்ந்து ஆனந்தசங்கரி அவர்கள் தன்னை தற்காத்துக்கொள்ளும் நோக்கோடு ஒட்டுக்குழுக்களுக்கும் சிங்கள அரசுக்கும் ஊதுகுழலாக செயற்பட்டு கரைந்து போனார் அன்றும் ஆனந்தசங்கரியுடன் கூட இருந்தவர் சாட்சாத் சிங்கக்கொடி சம்பந்தன் அவர்களே.

சிங்கள அரசுடன் பல பேச்சுவார்த்த முன்னெடுப்புக்களை சந்தித்த போராட்ட குழுக்கள் ஜனநாயக நெறிமுறைகளை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. ஒருபுறம் ஆயுத போராட்டம் தொடர்ந்தாலும் சனநாயக விழுமியங்களை மதித்து முன்னணி போராட்டக்குழுக்களை ஒன்றிணைத்த தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்கள் 2001 ஒக்ரோபர் 20 ம் நாள் தமிழர் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சியை தொடக்கி வைத்தார்.

கரைந்துபோன சங்கரி கட்சியிலிருந்து பிடி கொம்பு தேடிய சம்பந்தருக்கு தமிழர் தேசியக்கூட்டமைப்பு புகலிடமாக உதவியது.

தொடங்கப்பட்ட கட்சியின் தலைவராக தெரிவு செய்யக்கூடிய பல ஆயிரம் இளைஞர்கள் இருந்தபோதும் அகவை மற்றும் அரசியலில் இருந்தவர்கள் என்ற ஒரு மதிப்பளிப்பு பார்வையுடன் இரா சம்பந்தன், மாவை சேனாதாசா, அ வினாயகமூர்த்தி ஆகியோருடன் சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை மேதகு பிரபாகரன் அவர்கள் நிர்வாகிகளாக ஆக்கியிருந்தார்.

1977 ல் தொண்டமான் வெளியேறியது போன்று 2009 க்குப்பின் கேட்க ஆளில்லாத நிலையை பயன்படுத்தி சந்தற்பவாத கறுப்பாடுகளாக இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் தமிழர் தேசிய கூட்டமைப்பை அப்படியே வைத்துக்கொண்டு தாம் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் என்ற நிலையை எடுத்து வேறு விதமான ஒரு அரசியலை செய்துகொண்டிருக்கின்றனர்.

ஐநா மற்றும் சர்வதேச விசாரணைகளை பின்னுக்கு தள்ளவேண்டிய தந்திர உபாயமாக சிங்கள அரசும் தமிழ் அரசியல் உத்திகளும் இணைந்து அதிகாரம் அற்ற வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டது.

“வடக்கு மாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான சட்டவாக்க அவை ஆகும்”.

இலங்கை அரசியலமைப்பின் படி, வட மாகாண சபை வடக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும் அதிகாரம் படைத்ததாக இருக்கவேண்டும்.

இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் சிங்கள அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது.

வட மாகாண சபையில் 38 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். இச் சபைக்கு முதல்முறையாகத் தேர்தல் செப்டம்பர் 21, 2013 அன்று நடைபெற்றது.

சம்பந்தன் அவர்கள் தனக்கு ஒத்திசைவான ஒருவராக கருதி திரு சிவி விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக முன்மொழிந்தார்.

பதவிக்கு வந்த விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கையின் தலைமை நீதியரசராக இருந்தவர் என்பதனாலும், பதவிக்கு வந்தபின் கள யதார்த்தங்களை உள்வாங்கி அதிலிருந்து வெளியேற முடியாதவராக நியாயமாக செயற்படத்தொடங்கினார்.

அதன் விளைவாக,

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலை நடத்தப்பட்டது என்றும், இதுகுறித்து சர்வதேச விசாரணைக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, இலங்கையின் வடக்கு மாகாண சபை மூலம் 2015 ஒரு தீர்மானத்தை முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் நிறைவேற்றினார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிங்கள ஆட்சியாளர்களை விசனப்படுத்திவிட்டதாக கோபப்பட்ட சிங்கக்கொடி புகழ் சம்பந்தன் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் பதவியில் இருந்தும் அரசியல் அரங்கிலிருந்தும் துடைத்து அப்புறப்படுத்தும் சதியின் எதிரொலியின் எச்சம்தான் தற்போது நடந்து முடிந்த நிகழ்வாக கருதலாம்.

சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா சிறிதரன் போன்ற சிங்கக்கொடியின் நிழலில் மறந்து நிற்கும் கறுப்பாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பதவரை தமிழீழத்தில் தமிழர்கள் வாழமுடியாது என்பதே நிதர்சனம்.

ஈழத்து மக்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்தான் மருந்தாக மாறவேண்டும்.

ஈழதேசம் செய்திகளுக்காக,
கனகதரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்