லண்டனில் சுமந்திரனுக்கு கடும் எதிர்ப்பு – தோல்வியில் முடிந்த சுமந்திரனின் லண்டன் பயணம்!

பிரித்தானிய தமிழர்களின் கடும் எதிர்ப்புக்களை அடுத்து சுமந்திரன் தனது பிரித்தானிய பயணத்தை கைவிட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் பிரச்சார வசூலுக்காக இலண்டன் பயணத்தை ஒழுங்கு செய்திருந்த த.தே.கூட்டமைப்பு இலண்டன் கிளை மண்டபங்களை ஒழுங்கு செய்ததோடு சுமந்திரனோடு இராப்போசனம் என்ற போர்வையில் குறைந்தது இலங்கை ரூபாய் பத்தாயிரம் என பற்றுச்சீட்டுக்களை விற்பனை செய்திருந்தது.

இருந்தும் இளைஞர்கள் சுமந்திரனை சந்திக்கும் நோக்குடன் காத்திருந்ததாகவும் அங்கிருந்து அறியக்கிடைக்கிறது.

முன்னதாகவே சுமந்திரனின் பிரித்தானிய விஜயத்தை கண்டித்து அங்குள்ள இளைஞர்கள் முகநூல் வாயிலாக பலத்த எதிர்ப்புக்களை தெரிவித்திருந்த நிலையில் சுமந்திரனின் நிதிசேகரிப்பும் இராப்போசன விருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக த.தே.கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை அறிவித்துள்ளது.

காரணம் எதிர்ப்பாக இருக்கின்றபோதும் அதனை சொல்லாது தற்போது பெரும்மோசடி குற்றம் சாட்டப்பட்டு நடைபெற்றுவரும் இலங்கை மத்தியவங்கி பிணைமுறி மோசடி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும்போது குற்றம் சாட்டப்படும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாதாடுவதற்காக பாராளுமன்றில் சமூகமளிக்க வேண்டியிருப்பதாக சொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்