சிவனொளிபாத வனப் பகுதியில் கருங்கல்லில் பெரிய பாதத் தடம்

மஸ்கெலியா சிவனொளிபாதை வனப் பகுதியில் கருங்கல்லொன்றில் பெரிய பாத தடமொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்திலேயே இந்த பாதத் தடம் காணப்படுவதுடன் அந்த பாதத்தடம் வலது கால் பாதமெனவும் அது பெரிய அதிசயமிக்க பாதத்தடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அந்த பகுதியை சேர்ந்த தோட்டத் தொழிலாளி ஒருவரினால் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அந்த இடத்தில் வழிப்பாடுகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்