தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று வவுனியா பாவக்குளத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமது கூட்டமைப்புடன் சேரவுள்ளதாக முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம் தன்னிடம் தெரிவித்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

இடைக்கால அறிக்கையை தாம் குழப்பியதாக இருக்கக்கூடாது எனவும் அரசாங்கம் தேவைப்பட்டால் குழப்பட்டும் என ஊடகவியலாளர் சிவராமை கொன்றுவிட்டு கூட்டமைப்புக்கள் இருப்பவர்கள் இவ்வாறு தெரிவிப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தள்ளார்.

ஆனால் அரசு இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் மூலம் இடைக்கால அறிக்கைக்கான ஆதரவை பார்ப்பதாக தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் கடந்த ஒரு மாதமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி அரசிடம் வாங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இதனை ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது அதை மறுக்கவில்லை என தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் தான் சவால் விடுவதாகவும் முடிந்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது இதை மறுப்பார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி
வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிங்கள குடியேற்றங்கள் காரணமாக உள்ளுராட்சி சபைக்கு ஐந்து சிங்கள பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் பொதுச்செயலருமான சிவசக்தி ஆனந்தன், வவுனியா மருத்துவமனையின் அவசர

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*