அமெரிக்க குடியுரிமையை இழக்கும் கோத்தபாய! கொழும்பில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்காக அமெரிக்க குடியுரிமையை நீக்கி கொள்வதற்கு கோரிக்கையை கோத்தபாய முன்வைத்துள்ளார். விரைவில் குடியுரிமை இரத்து செய்யப்படும் எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குடியுரிமையை நீக்கி கொள்வதற்கு தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக கோத்தபாய அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

தனக்கு நெருக்கமானவர்களுடன் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் திட்டங்களை திட்டமிட்டுள்ளார். அதற்கமைய மறைந்த அவரது சகோதரர் டட்லி ராஜபக்சவின் அமெரிக்க வீட்டில் தனக்கு நெருக்கமானவர்களுடன் அரசியல் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

எனினும் கோத்தபாயவின் அரசியல் வருகையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கோத்தபாயவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சில தரப்பினர் எண்ணிய போதிலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

கோத்தபாயவை கைது செய்வதற்கு குற்ற விசாரணை திணைக்களம் கடந்த காலங்களில் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உயர் அரசியல் அழுத்தம் காரணமாக அது தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்