தனிக்கட்சி துவங்குகிறார் விஷால் – ரஜினி,கமலுக்கு சவால்!

விஷாலும் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளாராம்.

பல காலமாக இழுத்தடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வழியாக தனிக்கட்சி துவங்கி சட்டசசபை தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளார்.

கமல் வரும் 21ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.

கமல் ஹாஸன், ரஜினிகாந்தை அடுத்து விஷாலும் தனிக்கட்சி துவங்கி தமிழக அரசியலில் ஒரு ரவுண்டு வர முடிவு செய்துள்ளார். இதை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான பிறகு தனிக் கட்சி துவங்குவது குறித்து யோசிப்போம் என்று விஷால் பேட்டி அளித்துள்ளார். இது அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததால் தான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலுக்கான விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் ஓமந்தூராரின் சொந்த ஊரில் நடந்த அவரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார். ஓமந்தூராரை போன்றே விஷாலும் ரெட்டி இனத்தை சேர்ந்தவர்.

நான் ரெட்டியாக இங்கு வரவில்லை. ரெட்டி என்று சொன்னால் நான் நல்லது செய்ய ரெடி என்று எடுத்துக்கொள்வேன் என்று விஷால் தெரிவித்தது பலரை குழப்பம் அடைய செய்துள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்