கூட்டமைப்பிற்கு மூன்றாவது இடமே:தமிழரசு பிரமுகர்!

கூட்டமைப்பு இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் மூன்றாவது இடத்தை பெறுவது கூட சந்தேகமென சட்டத்தரணியும் பருத்தித்துறை நகரசபை முன்னாள் தலைவருமான சபா.இரவீந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தெரிவு பற்றிய ஆதங்கத்தை சபா ரவீந்திரன் வெளியிடுகையிலேயே கூட்டமைப்பு நகரசபையில் மூன்றாவது இடத்தை பிடிப்பதே கடினமென சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழரசின் தூண்கள் ஆடிவிட்டன.தென்மராட்சியெனவும் வடமராட்சியெனவும் அவை ஆட்டங்கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சி மத்திய குழு உறுப்பினரான அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கதிரைக்காகவும் சில மாகாணசபை கதிரைகளிற்காகவும் தமிழரசு ஆட்டங்கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சட்டத்தரணியும் பருத்தித்துறை நகரசபை முன்னாள் தலைவருமான சபா.இரவீந்திரன் மீது பாலியல் துஸ்பிரயோகம்,ஊழல் குற்றச்சாட்டுக்கள் அப்போது எதிர்தரப்புக்களால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
நெடுந்தீவு பிரதேசசபையினை முதுகில் குத்தி கைப்பற்றியதற்கு டெலோ அமைப்பே காரணமென தமிழரசுக்கட்சி தலைமை ஈபிடிபிக்கு விளக்கமளித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு மற்றும்
பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறானது தேசிய அரசாங்கத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக முழு
சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி என் மீது

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*