வல்வை நகர சபையில் மீள் வக்குப்பதிவு நடத்தக்கோரும் த.தே.கூ

வல்வெட்டித்துறை நகர சபைக்கன தேர்தலில் வாக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு மீள் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் திணைக்களத்திடம் கோரியுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் படி வல்வெட்டித்துறை நகர சபையில் 7 வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றது.

மேலும் 2 வட்டாரங்களில் தொண்டைமானாறு வட்டாரத்தை ஈ.பி.டி.பி கட்சியும், ஆதி கோவிலடி வட்டாரத்தை மீன் சின்னத்தில் போடியிட்ட சுயேட்சைக் குழுவும் கைப்பற்றியது.

குறித்த இரு வட்டாரத்தின் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியை தம்வசன் வைத்துக்கொண்டு மோசடி நடை பெற்றுள்ளது. இதனாலே அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது என்று அக் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்த 2 வட்டாரத்திலும் மீள் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கியிருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம், 100 நாட்கள் நி றைவுக்குள்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடிக்கடற்கரையில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தை கொழுப்பிலிருந்து வருகைதந்த குழுவினர் இன்று

About காண்டீபன்

மறுமொழி இடவும்