சிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 இன் முதல் இருநாள் நிகழ்வுகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும் வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டியின் முதல் இருநாள் நிகழ்வுகள் கடந்த சனி (10), மற்றும் ஞாயிறு (11) ஆகிய இரு தினங்கள் வெகு சிறப்பாக இடம் பெற்றன.

முதல் நாள் (10.02.2018) நிகழவின் ஆரம்ப நிகழ்வாக 26.06.1989 அன்று வவுனியாவில் இடம் பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கப்ரன் ரூபனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கத்தைச் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வின் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பாலர் பிரிவு மற்றும் மேற் பிரிவுகளில் தனிப் பிரிவுப் போட்டியும், மத்திய பிரிவு குழு போட்டியும் இடம் பெற்றன.

இரண்டாம் நாள் (11.02.2018) நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக 27.03.1988 அன்று இந்திய படைகளுடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை நரேந்திரனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கத்தைச் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்கள் அறிமுகப்படுத்தப் பட்டனர். தொடர்ந்து மத்தியபிரிவில் தனிப்பிரிவும், கீழ்ப்பிரிவின் குழுப் போட்டியும் இடம் பெற்றன.
எதிர்வரும் சனிக்கிழமை (17.02.2018) கீழ்ப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் தனிப்பிரிவுப் போட்டியும், மேற்பிரிவு மற்றும் அதி மேற்பிரிவு களின் குழுப் போட்டியும்,
ஞாயிற்றுக்கிழமை (18.02.2018) அன்று இறுதிப் போட்டியும் பிளோமினிலில் நடை பெற உள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்