விளையாட்டு மைதான புனரமைப்பில் விளையாடிய கூட்டமைப்பு பா.உறுப்பினர் ஞா.சிறிநேசன்!

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சால் 57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்புனரமைப்பு வேலைகள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மேற்பார்வையில் நடைபெற்றுள்ளது.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் கண்காணிப்பில் மட்டக்களப்பு மேற்கு பிரதேச செயலகத்தின் ஒப்பந்தகாரர்களால் 57 இலட்சம் ரூபா நிதியில் புனரமப்பு செய்யப்பட்ட விளையாட்டு மைதானத்தின் இன்றைய நிலையை பாருங்கள்.

மாவீரர் மதி அவர்களின் கண்காணிப்பில் இப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு மைதானம் மட்டக்களப்பு மேற்கு பி.சபையால் கட்ந்த 10 வருடங்களாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இச் சபையும் இந்த புனரமைப்பை கண்டு கொள்ளாததால் 57 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டதாக குறித்த பகுதி இளைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதி இளைஞர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு…
1.புனரமைக்கப் படாத பெயர்ப்பலகை
2.துருப்பிடித்த புதிய நெற்
3.பெயின்ற் பண்ணப்படாத பைப்
4.சமப்படுத்தப்படாத தரை
5.போதுமான அளவு இடப்படாத கிறவல்
6.வெளியில் தெரியும் நீர்க் குழாய்கள்
7.தொய்வாக அடிக்கப்பட்ட நெற்
8.110,000 ரூபா எஸ்டிமேட் செய்யப்பட்டும்
60,000 ரூபாவில் செய்யப்பட்ட நடுவில் தகரத்தாலான நுழைவாயில்
9.இன்னும் பல

இவ்வளவு குறைபாடுகள் இருக்கும் இந்த மைதானத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும் அல்லது இவர்களது பொக்கட் நிரப்பப்பட்டு விட்டதாகவும் சந்தேகிக்கக் கூடியவர்களாக
1.பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஐயா
2.மட்டக்களப்மேற்கு பிரதேச செயலர்
3.மட்டக்களப்பு மேற்கு பி.சபை செயலாளர்
4.மட்டக்களப்பு பிரதேச சபை
5.மட்டக்களப்பு பிரதேச செயலகம்
6.அப் பிரதேச ஒப்பந்தக் காரர்
7.மட்டக்களப்பு மேற்கு பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு

இவர்கள் அனைவரும் பொறுப்புக் கூறுவதோடு கண்களை கசக்கிவிட்டு பாருங்கள் குறிப்பிட்ட நிதிக்குரிய வேலைகள் போதுமானதாக இல்லை என்பதும், செய்யப்பட்ட வேலைகளில் குறைபாடுகள் உண்டு என்பதும் புரியும். அத்துடன் இன்றுவரை பாடசாலை மாணவர்களோ இளைஞர்களோ பயன்படுத்த முடியாமல் நுழைவாயில் பூட்டப்பட்டுள்ளது வேதனைக்குரிய விடயமாகும் என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் மக்களால் மக்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் வண்டவாளம் இங்கே தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுள்ளது. மக்களே சிந்தியுங்கள். இனிமேலாவது சுத்தமான கரங்களைக் கொண்டவர்களை உங்கள் பிரதிநிகளாக்குங்கள்.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்