அரசியல் யாப்பு பணிகளிலும் தெற்கின் மாற்றம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – மாவை!

சிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்கு பாதகமான சூழ்நிலையினை தோற்றுவிக்கும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு பணிகளிலும் தெற்கின் மாற்றம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – மாவை!

இனப்பிரச்சினையை தீர்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு பணிகளிலும் தெற்கின் மாற்றம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து ஊடகவியலாளர்கள் வினவினார்கள்.

இதற்கு பதிலளித்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகள் அல்ல எனவும் தமிழ் இனத்தின் பிரச்சினை தீர்பதற்காகவே அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்