குவைத்திலிருந்த 4000 இலங்கையர் மீண்டும் நாட்டுக்கு

விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசித்து வந்த 4000 இற்கும் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வீசா அனுமதிப்பத்திரமின்றி வசித்து வந்தவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் இம்மாதம் 22ம் திகதியுடன் முடிவடைகின்றது.

இந்தப் பொது மன்னிப்புக்காலத்தைப் பயன்படுத்தி 4 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேலும் 800 பேர் நாடு திரும்பத்தயாராகி வருவதாகவும் சுமார் 15 ஆயிரம் இலங்கை ஊழியர்கள் உரிய விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்