மகிந்த தரப்பினர் இதே போன்று செயற்பட்டால் தமிழீழம் மலருமாம் – சிங்கக்கொடி சம்பந்தன்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் தொடர்ந்தும் இதே போக்கில் செயற்பட்டால் தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் மலரும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறும், சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர்,

“உள்ளூராட்சி த் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும்.

இது 2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த வாக்குகளை விடக் குறைவு தான். எனவே இந்த தேர்தலிலும் வெற்றிபெறவில்லை.

தேர்தல் பரப்புரையின் போது, தமிழீழ கதைகளை கூறியே சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர்.

ஐதேகவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழீழம் உருவாக வழியை உருவாக்கும் என்று சிங்கள மக்களை ஏமாற்றி நம்ப வைத்திருக்கிறீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான நாங்கள் தமிழீழத்தை கேட்கவில்லை.

ஒன்றுபட்டு ஒரே நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு தான் நாங்கள் கேட்கிறோம்.

ஆனால், நீங்கள் இதுபோன்று தொடர்ந்து நடந்து கொள்வீர்களேயானால், ஈழம் மலர்ந்து விடும். தாமரை மொட்டில் இருந்து தான் அந்த ஈழம் மலரும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியல் தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய
“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது.
பிரபாகரனின் வீரம், மானம், தேசியத்தில் உறுதி, பாசம் எல்லாவற்றுக்கும் தலைகீழான ஒருவரே சம்பந்தன். இவர் தமிழர்களின் அவமானச்சின்னம் 1960இல் சத்தியாக்கிரகம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*