இரகசிய வாக்கெடுப்பு அர்த்தமற்றது! – கஜேந்திரகுமாரின் சவாலை மாவை நிராகரிப்பு

உள்ளுராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அரசியல் சுயலாபங்களுக்காக ஒரு கட்சி ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் மற்றவர்கள் செயற்பட கூடாது என நாடாளு மன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலமை அவலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவா று கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில் ‘ நாங்கள் எமது கட்சி சார்ந்த உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கேட்டிருக்கிறோம். ஒற்றுமையாக செயற்படுமாறு கேட்டிருக்கிறோம் அதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிரட்டல் என கூறுவது அவரின் சதிதிட்டங்களுக்கு தடையாக அமையும் என்பதாலேயாகும். மேலும் இரகசிய வாக்கெடுப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். காரணம் அது ஒரு அர்த்தமற்ற செயற்பாடாகும். தமிழ்தேசிய கூட்டமைப்பு 56 சபைகளில் 40 சபைகளை கைப்பற்றியுள்ளது. வடகிழக்கில் நாங்கள் பெரும்பான்மை பெற்றிருக்கிறோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலமையிலான கட்சி 2 சபைகளை மட்டுமே கைப்பற்றியிருக்கின்றது. ஆகவே நாங்கள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் ஆட்சியமைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆகவே ஆட்சியமைக்கும் கட்சிகள் மற்றய கட்சிகளுக்கு தடையாக இருக்க கூடாது.

அவ்வாறு குழப்பினால் நாங்களும் குழப்பலாம்.ஆனால் நாங்கள் அவ்வாறு சொல்லவுமில்லை. செய்யவும் மாட்டோம். தமிழ்தேசிய மக்கள் முன்னணி இந்த தடவை மட்டுமல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் எங்களை தோற்கடிப்பதாக கூறு கிறது. இப்போதும் எங்களை தோற்கடிப்பதாக கூறுகிறார்கள். நாங்கள் வெற்றியடைந்ததுபோல் வேறு கட்சிகள் வெற்றி பெறவில்லை. எனவே எம்மை குழப்புவது அல்லது தோற்கடிக்க நினைப்பது தமிழ்தேசத்தின் எதிர்காத்தை சிதைப்பதாக அமையும். மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவதை நிறுத்தவேண்டும்.

இதனை நாங்கள் ஒரு கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம். எங்களுடைய கட்சியிலிருந்து மற்றய கட்சிகளுக்கு தாவுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அச்சுறுத்தும் வகையிலான கருத்தல்ல. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்ன கருத்தாகும். நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் ஆட்சியமைக்கப்போவதாக கூறுகிறார்கள்.இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடாகவே அமைகின்றது. அவர்களைபோல் நாங்கள் செயற்படப்போவதில்லை. காரணம் எங்களிடம் 40 சபைகள் இருக்கின்றன.

மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதுபோல் இரகசிய வாக்கெடுப்பு என்பதை நாங்கள் நிராகரிக்கிறோம். அவ்வாறான இரகசிய வாக்கெடுப்பு அர்த்தமற்ற ஒன்றாகும். மேலும் நாங்கள் ஆட்சியமைப்பதை அவர்கள் குழப்பாமல் இருக்கவேண்டும் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்