சிரியாவில் தாக்குதல்: குழந்தைகள் உட்பட 98 பேர் பலி!

மேற்காசிய நாடான சிரியாவில், புரட்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய பயங்கர தாக்குதலில், 20 குழந்தைகள் உட்பட, 98 பேர் உயிரிழந்தனர்.

கடந்த, 2011 முதல், அதிபர், பஷர் – அல் – ஆசாத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், சிரியாவின் பல பகுதிகளை, புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அவர்களுடைய பிடியில் உள்ள பகுதிகளை, ராணுவ உதவியுடன் அந்நாட்டு அரசு மீட்டு வருகிறது.

சமீபத்தில், புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. சிரிய ராணுவத்தினரின் விமான தாக்குதலில், 20 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட, 98 பேர் பலியானதாக, பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்