எழுச்சியாக இடம் பெற்ற வன்னிமயில் 2018 விருது நிகழ்வு!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய வன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி எழுச்சியாக நிறைவு பெற்றது. 10,11,17,18.02.2018 ஆகிய நான்கு தினங்கள் 500 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றிய ; தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (18.02.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 21.00 மணி வரை பரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான பிளோமினிலில் எழுச்சி பூர்வமாக இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக 25.10.2008 அன்று முகமாலையில் சிறீலங்காப் படைகளுடனான மோதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் நித்திலன் அவர்களின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

அக வணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்களிடம் போட்டி களுக்கான கேவை வழங்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதி மேற் பிரிவு அதி அதி மேற் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கான போட்டிகள் இடம் பெற்றன.

தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

நான்கு நாள் நிகழ்வுகளில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த நடுவர்கள் மதிப்பளிக்கப் பட்டதுடன். இந் நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களில் நடன ஆசிரியைகள் மதிப் பளிக்கப்பட்டனர்.

தொடர்ந்துஇ பரசளிப்பு வைபவம் இடம் பெற்றது.

இறுதியாக கடந்த எட்டு ஆண்டுகளில் வன்னி மயில் விருதுகளை பெற்றுக்கொண்டவர்கள் முன்னிலையில் 2018 ஆண்டுக்கான வன்னிமயில் விருதை பெறுபவர்த பலத்த கரகோசத்தின் மத்தியில் அறிவிக்கப்பட்டார்.

அவருக்கான கேடயமும்இ பட்டமளிப்பும் முன்னைய வன்னி மயில் விருதுகளைப் பெற்றுக்கொண்டவர்களால் வழங்கப்பட்டன.

தொடர்ந்து வன்னிமயில் விருதினைப் பெற்றவர் கேணல் பரிதி அவர்களின் தாயாரால் பதங்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.

நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவேறின.

About இலக்கியன்

மறுமொழி இடவும்